Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 28 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் கடந்த சில மாதங்களாக கடல் மண்ணால் மூடப்பட்டுக் காணப்படும் நிலையில், அம்மண்ணை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்குமாறு மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை கரையோர மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எம்.ஜீ.எம்.பகுர்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் இன்று அனுப்பிவைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை மணல் மூடியுள்ளதால், மீனவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதனால், அவர்களின்; கடற்றொழில் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலை இழந்துள்ள மீனவர்கள், பொருளாதார ரீதியாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நுழைவாயிலில் காணப்படும் மண்ணை அகற்றுவதாக அமைச்சர்கள் பலர்; வாக்குறுதி அளித்தபோதும், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இம்மண்ணை அகற்றி மீன்பிடித் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago