2025 மே 05, திங்கட்கிழமை

மதஸ்தலங்களில் கூடினால் சட்டம் பாயும்

Princiya Dixci   / 2021 மே 24 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுபவர்களை கைதுசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (24) தெரிவித்தார்.

பயணத்தடை விதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பள்ளிவாசல்கள், விகாரைகள், கோவில்கள் ஆகியவற்றில் ஒன்றுகூடுபவர்கள் கைது செய்யப்படுவதோடு, அதன் நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினாலும், பொலிஸாராலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறு, பொதுமக்களை அவர் மேலும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X