Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 10 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை, ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை திருடி சென்றவரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்துக்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் வரையான அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடப்பட்ட மரங்களின் பாதுகாப்பிற்காக மரக் கூட்டுத்தாபனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக் கூடுகள் திருடப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய வனப் பரிபாலனை திணைக்களத்தின் உத்தியோகத்தர், பெளதீக வள அதிகாரியால் சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் நவகீதன் உள்ளிட்ட குழுவினர், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், பொலிஸ் ஊரடங்கு நேரத்தில், குறித்த மரக்கூடுகளை திருடி தன்னுடைய உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 56 வயதுடைய சந்தேகநபர், நேற்று (09) கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
1 hours ago