Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.விஜயரெத்தினம்)
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (4) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை கல்முனையிலிருந்து -மட்டக்களப்புக்கு விரைந்து சென்ற தனியார் பேருந்து விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் வீதியில் கிடப்பதை கவனிக்காமல் சென்ற தனியார் பேருந்தை அங்கிருந்த பொதுமக்கள் கூக்குரலிட்டு நிறுத்தியுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்தியவரை கவனிக்காமல் தப்பிச்சென்றமை கண்டிக்கதக்க விடயமாகுமென அங்கு கூடியிருந்த பொதுமக்களால் பேருந்தின் நடத்துனரையும் எச்சரித்துள்ளதுடன், காயப்பட்டவரை வைத்தியசாலைக்கு அனுப்பி அவருக்கு சிசிச்சையளிக்குமாறு பொதுமக்கள் எச்சரித்தார்கள்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026