Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 08 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள தனியார் மருந்தகங்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
மருந்தகங்களில் பரிய குறைபாடுகள் கண்டிறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை இரு வாரங்களுக்குள் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய மருந்தகம் மூடப்படுமெனவும் தெரிவித்தார்.
பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 64 தனியார் மருந்து விற்பனை நிலையங்களும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சில மருந்தகங்களில் காலவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையைப் பயன்படுத்தி கூடுதலான விலைக்கு மருந்துகள் விற்பனை செய்வதாகவும், நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து தொடர்ந்தும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago