2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மானிய உதவிகள் வழக்க நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாய சங்கங்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும், மானிய உதவிகள் வழங்கப்படவுள்ளதாக, அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரியும், விவசாய போதனாசிரியருமான ஏ.எச்.ஏ. முபாறக் தெரிவித்தார்.

மத்திய அரசின் கருத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள இந்த மானிய உதவிகளுக்கான பதிவு செய்யும் ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கத்தின் பதிவுச் சான்றிதழ், யாப்பு, உறுப்பினர் பெயர், விலாசம், பதவி, தொடரிலக்கம போன்ற விவரங்களின் பிரதியுடன், அட்டாளச்சேனை விவசாய விரிவாக்க அலுவலகத்துக்குச் சமுகமளித்து பதிவு செய்து கொள்ளுமாறும் இது தொடர்பான மேலதிக விபரங்களை 0759743156 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .