Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 மே 19 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவு பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு மீன் சந்தையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மீன் வியாபாரிகளுக்கு இன்று (19) கொவிட் - 19 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க, காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ் பெறுபேற்றைத் தந்ததாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இதேவேளை, காரைதீவில் மதுபானசாலை அமைந்துள்ள பிரதான வீதிகளிலும் இத்தகைய அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago