Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அரச துறைகளில் உயர் பதவிகளில் சேவையாற்றி தமிழர் சமூதாயத்தின் ஆளுமைகளாக பெயரும்,புகழுடன் இருந்த தமிழர் சமூகம் கடந்த முப்பது வருட யுத்தம் காரணமாக கல்வி,பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் பின்தள்ளப்பட்ட நாம், மீண்டும் தமிழ்களின் ஆளுமையை நிலை நிறுத்த வேண்டுமென தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன், மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர்ந்து கற்று, தங்களின் ஆளுமைகளை நிரூபித்துக் காட்ட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபர் க.கமலராஜன் தலைமையில் உயர்தர வகுப்பு ஆரம்ப முதல் நாள் நிகழ்வில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(08) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை மாணவர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்கள் கல்வியின் ஊடாக இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்திலும் கலை,கலாசாரம் மற்றும் மொழி ரீதியாக சாதனைகளை நிலைநாட்டி வந்துள்ளனர். உதாரணமாக உலக வல்லரசு அமெரிக்கா உட்பட உலக நாடுகளை சுவாமி விவேகானந்தர் தனது அறிவார்ந்த பேச்சினால் ஆச்சரியப்படுத்தியதுடன் இன்று அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி இட்டவர்கள் எவருமில்லை. இந்நிலையில் தமிழர்களின் வரலாறு உலகறிய கல்வியின் பங்கு முக்கியமானதாக இருப்பதுடன் இலங்கையில் நடைபெற்ற முப்பதுவருட யுத்தம் காரணமாக நாம் சற்று பின்தள்ளப்பட்டு இருக்கின்றோம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
05 May 2025