Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், முதல் முறையாக தத்துவ முதுமானி ஆய்வு மற்றும் கலாநிதி ஆய்வு பட்டபின் படிப்பு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத் தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் திணைக்களத்தால் இவ் ஆய்வுக் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வராலாற்றில் முதல்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இப்பட்டபின் படிப்பு கற்கை நெறிக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக தொழில்நுட்பவியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பம், செப்டம்பர் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமெனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை 0672052818 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு இவ் ஆய்வு கற்கைநெறி ஒரு வரப்பிரசாரமாகும் என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீமின் முயற்சினால் பல்துறை சார்ந்த ஆய்வுகள், சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு போன்றவைகளுக்கும் மற்றும் இவ்வாறான கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் கவனம் எடுத்து இங்குள்ள விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் ஊக்கிவிப்பதும் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 May 2025
14 May 2025
14 May 2025