Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அரச உத்தியோகத்தர்களின் முறைகேடான இடமாற்றங்களை உடன் நிறுத்துமாறு கோரி, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (05) மகஜர் அனுப்பி வைத்துள்ளதாக, சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாறக் தெரிவித்தார்.
அந்த மகஜரில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடந்து, கிழக்கு மாகாணத்தில் அரசியல் பழிவாங்கள் ரீதியான இடமாற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரச உத்தியோகத்தர்களின் ஆரம்பமட்ட மற்றும் இடைநிலைமட்ட உத்தியோகத்தர்கள் முறையற்றதும் அரசியல் பழிவாங்கலுள்ளாகும் வகையிலும் இடமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அரசாங்க உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமை மற்றும் சிறப்புரிமை மீறும் செயல் என்றும் பொத்துவில் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியுதவியாளர், செயலாளர் ஆகியோர் இவ்வாறான இடமாற்றங்களை பெற்றுள்ளதுடன், மேலும் பலர் இவ்வாறான இடமாற்றத்துக்குள்ளாகலாம் என்ற அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இவ்வாறான இடமாற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கம், இவ்வாறு இடமாற்றங்களை ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் நியமிக்க ஏற்பாடு செய்தல் வேண்டுமென்றும் அம்மகஜரில் கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
37 minute ago
37 minute ago