Yuganthini / 2017 ஜூன் 07 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யூ.எல்.மப்றூக், ஏ.எல்.எம்.ஷினாஸ்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும் சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா, தனது 73ஆவது வயதில், இன்று (07) அதிகாலை காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளார்.
அம்பாறையின் கல்முனைப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், ஆசிரியராகவும் அதிபராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றியவராவார். அத்துடன், அக்கரைப்பற்று - கல்முனை மாவட்டச் சாரண உதவி ஆணையாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
1965ஆம் ஆண்டு முதல், பிராந்திய ஊடகவியலாளராகவும் தொழிற்பட்ட இவரை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தனது ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துக்கொண்டது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026