2025 மே 05, திங்கட்கிழமை

‘மே 18 வீட்டிலிருந்து விளக்கேற்றுங்கள்’

Princiya Dixci   / 2021 மே 12 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

“உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். எமது இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காக இம்மாதம் 18ஆம் திகதி பிற்பகல் 18.00 (மாலை 6 மணி) 18 நிமிடம் 18 வினாடியில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள்” காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.

பிரதேச சபையின் 39ஆவது மாதாந்த அமர்வு, இன்று (12) நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “கொரோனா அசாதாரண நிலைமை காரணமாக சுகாதார வைத்தியஅதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக இன்று முதல் வெளியூர் அங்காடி வியாபாரிகளுக்கு இச்சபை தடை விதிக்கிறது.
 
“வருமானம் குறைந்த சபையாக எமது சபை இருந்தபோதிலும் எமது முயற்சியால் 20 இலட்சம் ரூபாய் இருப்போடு இருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைதைக் கண்டித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி உறுப்பினர் எம்.எஸ்.ஜலீல் கொண்டு வந்த பிரேரணை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X