Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Gavitha / 2017 மே 01 , பி.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன், கனகராசா சரவணன்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, அரசியலில் இணைத்துக்கொள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதென, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து, புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதால், ஜனநாயக நீரோட்டத்தின் அரசியல் செயற்பாடுகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவே, தமிழரசுக் கட்சி எதிர்ப்பார்க்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், அம்பாறை, ஆலையடிவேம்பு, தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, முஸ்லிம் தலைவர் ஒருவரை முதலமைச்சராகத் தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்குவதாக, பகிரங்கமாக அறிவித்திருந்தும், அதற்கு உடன்படுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் தவறிவிட்டனர். இந்த நல்ல சந்தர்ப்பத்தை, தாம் பகிரங்கமாக அறிவித்தது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஓர் அத்திபாரமாக அமையும் என்பதற்கேயாகும்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுத்து வருவதுடன், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடுகிறது.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில், கூட்டமைப்பு அயராது பாடுபடுகின்றது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைவதில், கூட்டமைப்பு முனைப்பாக இருந்துகொண்டிருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025