Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 23 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பொத்துவில் உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற குடும்பஸ்தரை, குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகதியில் வைத்து பாம்பு தீண்டியுள்ளது.
இதில் மயக்கமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார் என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நேத்திக்கடனை முடிப்பதற்காக உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துற்கான பாதையாத்திரையை ஆரம்பித்து சென்று கொண்டிருந்த நிலையில், சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை (22) மாலை 6 மணியளவில் குமுக்கன் வனப்பூங்கா இந்துக் கோவில் பகுதியில் காலில் பாம்பு ஒன்று தீண்டியதையடுத்து மயக்கமடைந்துள்ளர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் முகாமிட்டு மருத்துவசேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் உடனடியாக அம்பிலன்ஸில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.
சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோலில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இரு தினங்களுக்கு முன்னர் கதிர்காம காட்டுவழி பாதையாத்திரையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)
8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago