2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரஹ்மானுக்கு அனுதாபப் பிரேரணை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மாநகர சபா மண்டபத்தில் நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அழைப்புக் கடிதம், மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர செயலாளர் எம்.ஐ.பிர்னாஸினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், வழமையான சபை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இசட்.ஏ.எச்.ரஹ்மானின் மறைவுக்கான அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது.

இப்பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த இசட்.ஏ.எச்.ரஹ்மான், தனது 53ஆவது வயதில் கடந்த 05ஆம் திகதி காலமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .