2025 மே 05, திங்கட்கிழமை

ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

Princiya Dixci   / 2021 மே 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 மாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டியில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விரைவான விடுதலை கிடைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பாக மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி, இஸ்லாமபாத்,  சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி,  சவளக்கடை, மத்தியமுகாம் மற்றும் பொத்துவில் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X