Princiya Dixci / 2021 மே 04 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ், இன்று (04) தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய, பிரதேச சபைகள் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 06 பிரதேச செயலாளர் பிரிவிலும் 7,524 குடும்பங்களைச் சேர்ந்த 25,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,013 குடும்பங்களைச் சேர்ந்த 3,357 பேரும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் 1,960 குடும்பங்களைச் சேர்ந்த 6,245 பேரும், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,489 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,147 குடும்பங்களைச் சேர்ந்த 3,797 பேரும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 2,778 குடும்பங்களைச் சேர்ந்த 9,645 பேரும், தமன பிரதேச செயலாளர் பிரிவில் 158 குடும்பங்களைச் சேர்ந்த 614 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அதேளை, வரட்சியால் கால்நடைகள் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்மந்தப்பட்ட பிரதேச கால்நடை வைத்தியதிகாரிகள் தகவல்களை வழங்கும் பட்சத்தில், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கு மக்கள் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தொடர்ச்சியாக குடிநீர் பவுசர் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் தேவைப்படும் பட்சத்தில் மேலதிகமாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தொகைக்கேற்ப பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கமைய நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
17 minute ago
39 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
39 minute ago
40 minute ago
51 minute ago