Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி பொருட்களை விற்பனை செய்த 18 வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.
நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் வர்த்த நிலையங்களில் இவ்வாரம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, அரிசியை கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு விற்றல் மற்றும் பொருட்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றத்துக்காகவே வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, ஆகிய நியாதிக்கத்திட்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தியவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்தல், நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து மக்களை ஏமாற்றுதல் போன்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடுமெனவும், தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்தும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025