Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு எல்லையினுள் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவிட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை, எவரிடமும் அவ்வாறு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இன்று (11) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சாய்ந்தமருது பிரதேசத்தில் சிலர் வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதாக மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால், அவ்வாறு வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதற்கு மாநகர சபையால் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
“ஆகையால், மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரதான வீதி மற்றும் உள் வீதிகளில் எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாமென வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
“எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் கோரினால் உடனடியாக மாநகர சபைக்கு அறிவிக்கவும்.
“மேலும், இதன் பின்னரும் எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிட்டால், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago