2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விசேட கலந்துரையாடல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கற்றுக்கொண்ட பாடங்கள், பொறுப்புக்கூறல்' எனும் தொனிப்பொருளில், அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஒழுங்கு செய்துள்ள விசேட கலந்துரையாடலொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், நாளை (07) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், குறைபாடுகள், அவதானிப்புகள் தொடர்பாக, இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாக, அம்பாறை உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன அறிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலிலும், முன்னர் இடம்பெற்ற குறைபாடுகள் எவையும் இடம்பெறாமல் சிறப்பான முறையில் அந்தத் தேர்தல்களை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்வுகள், இக்கலந்துரையாடலின் போது எட்டப்படுமென எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கடமையாற்றிய சிரேஷ்ட தலைமை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .