Princiya Dixci / 2021 மார்ச் 22 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் விதைப்பு பணிகள், இம்மாதம் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் சிறுபோக நெற்செய்கை விதைப்புப் பணிகளை, மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமென, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளார் ரீ.விவேக் சந்திரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் வலது கரை வாய்க்கால் நீர்ப்பாசனத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை ஆகிய மூன்று வலயங்களில் மொத்தம் 24,000 ஏக்கர் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. மேற்படி நெற் காணிகளில் விதைப்புப் பணிகள், மே மாதம் 10ஆம் திகதி வரை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிராந்திய நிர்ப்பாசனப் பிரிவில் ஆற்றுப் பாய்ச்சலுக்குட்பட்ட வீரையடி பிரதேச நெற்காணிகளில் 4,700 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. இக்காணிகளில் இம்மாதம் 25ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை விதைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் மொத்தம் இம்முறை 28, 700 ஏக்கரில் நெற் செய்கை பண்ணப்படவுள்ளது.
இதேவேளை, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படாத காணிகளுக்கு எக்காரணம் கொண்டும் நீர் விநியோகிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago