Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
'யாவருக்கும் புகலிடம' எனும் உயரிய சிந்தனை மற்றும் நோக்குடன், அரசாங்கம் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பல்வேறுத் திட்டங்களை நாட்டில் விரைவாக முன்னெடுத்து வருகின்றது.
இதனோர் அங்கமாக, மானிய அடிப்படையிலான காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்கி மாதிரி கிராமங்களை அமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழாக, பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகத்தேர்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், நேற்று(10) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் ஏ.யோகராணி, உதவி பொறியியலாளர் எம்.ஏ.கால்டீன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, குடும்ப நிலை தொடர்பான ஆய்வையும் தேர்வையும் நடத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைவாக, வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவான இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு, மானியமாகக் காணியும் வீட்டை அமைப்பதற்காக வீடமைப்பு அதிகார சபையினூடாக 5 இலட்சம் பணமும் வழங்கப்படும்.
இதனைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள், தமது பங்களிப்புடன் முழுமையான சிறந்ததொரு வீட்டை அமைத்துக்கொள்வதுடன் 25 வீடுகளை உள்ளடக்கியதாக மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
இதற்கமைவாக, நேற்று இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் 75குடும்பத் தலைவர்கள் பங்கேற்றதுடன் இவர்களில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 25பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago