2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வீட்டுத் தோட்டச் செய்கை ஊக்குவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சுபீட்சத்தின் நோக்கு 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, ஒலுவில் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு, வீட்டுத் தோட்ட உற்பத்திக்கான விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீலினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி சமுதாய அடிப்படை ஒழுங்கமைபின் சமூக ஆய்வாளர் ஏ.எம்.பழீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.நிஹ்மத்துல்லாஹ், சமுர்த்தி திட்ட முகாமையாளர் என்.ரி.மசூர் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .