Editorial / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
சௌபாக்கியா வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை வார நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கமநல சேவை நிலையங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதன்படி, ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நிரந்தர வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தெரிவுசெயய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில், வாழைச்சேனை கமநல சேவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கமநல சேவை திணைக்களத்தின் விவசாய பிரதிநிதி எஸ்.நடேசன் ஆகியோர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதைப்பொதிகளை வழங்கினர்.
விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.ஜமால்தீனினால் வீட்டுத் தோட்டம் தொடர்பான தொழில் நுட்ப அறிவுறுத்தல்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025