2025 மே 01, வியாழக்கிழமை

வீதிகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 02 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பழுதடைந்து காணப்படும் வீதிகள், 33 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாகப் புனரமைக்கப்படவுள்ளன என,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட், நேற்றுத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதற்கான நிதியை  ஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

களப்புக்கட்டு வீதி, அலி ஓடாவியார் வீதி, ஜலால்தீன் சதுக்கம் அல்-பஹ்ரியா குறுக்கு வீதி, செய்னுலாப்தீன் ஆசிரியர் வீதி ஆகிய வீதிகளே புனரமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .