2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல்’

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்                                 

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கலாநிதி கயான் தர்ஷன தெரிவித்தார்.

வேட்பு மனுவில் நேற்று (16) கையொப்பம் இட்ட அவர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில், “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமே நாட்டை ஆளுகின்றது என்று சொல்லப்படுகின்ற போதிலும் கோட்டா, மஹிந்த, பசில், நாமல் என்று ஒவ்வொருவருமே தனித் தனி துணைக் குழுக்களை வைத்து கொண்டு, அதிகாரம் செய்கின்றார்கள்” என்றார்.

“இவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிக்கு நாடும் மக்களும் பலியாகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டிய அவர், அம்பாறை மாவட்டத்தின் மூவின மக்களினதும் கனவுகளை மனதில் சுமந்தவனாக, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக இத்தேர்தலில் தான் களம் இறங்குகின்றேன் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .