Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட்டுக்குள் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்துக்கு ஒலுவில் கல்வி அபிவிருத்திக் குழுவின் அனுசரணையுடன் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களைக் கையளிக்கும் நிகழ்வு, அவ்வித்தியாலயத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு, முதற்கட்டமாக ஆசிரியர் நியமனங்கள்; வழங்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கையை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டும் எடுத்துள்ளனர்.
மேலும், அதிகளவான வேலையற்ற பட்;டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்புக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
35 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026