2025 மே 01, வியாழக்கிழமை

’இடமாற்றங்களை இரத்துச் செய்யவும்’

Editorial   / 2017 ஜூன் 02 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளைக் கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

புதிய சுற்று நிருபத்தின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், அவ்வலயத்திலிருந்து 40 ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான செயற்பாடாகும் எனவும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் புதிய சுற்று நிருபத்தின் படி, 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் கடமை புரிகின்ற 29 ஆசிரியர்கள் வெளி மாவட்டப் பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இதில் பெண் ஆசிரியர்கள் 26பேரும், ஆண் ஆசிரியர்கள் 3பேரும் உள்ளடங்குகின்றனர்.  வருடாந்த இடமாற்ற திட்டத்தின் கீழ் 11 ஆசிரியர்களும் மொத்தமாக 40 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் ஏற்கெனவே ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் சுமுகமான செயற்பாடுகள் சீர் குலைந்து பாடசாலையின் வழமையான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள்; ஆசிரியர்களின் வெற்றிடங்கள் காரணமாக பாடசாலை அதிபர்களின் நிர்வாகக் கட்டமைப்பும் சீர் குலைந்து காணப்படுகிறது.

இந்த ஆசிரியர்களின் இடமாற்றம் அக்கரைப்பற்று வலய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு எதிரான சதித் திட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .