Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 04 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், கலாசாரம் உள்ளிட்டவை பறிபோகும் வகையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் செயற்படாது என மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சமகால அரசியல் மற்றும் கட்சிப் புனரமைப்பு சம்பந்தமாக சம்மாந்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (3) இரவு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'முஸ்லிம் மக்களுக்குரிய ஒரேயொரு பலம் முஸ்லிம் காங்கிரஸாகும். ஆனால், அக்கட்சியை சீர்குலைப்பதற்கு பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிலிருந்து கட்சியைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்றார்.
'முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிகத் தைரியமாக எடுத்துக்கூறும் ஒரேயொரு கட்சி முஸ்லிம் காங்கிரஸாகும். இந்தக் கட்சி ஒருபோதும் தனது நிதானத்தை இழக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் தனி நபர்கள் முக்கியமல்லர். அது எப்போதும் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். அதுவே முக்கியமாகும்.
'முஸ்லிம்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரேயொரு கட்சியாகவும் எமது மக்களின் ஆதரவையும் அங்கிகாரத்தையும் பெற்ற கட்சியாக விளங்கும் மு.கா, தேசிய அரசியலில் மாத்திரமன்றி, சர்வதேசத்தின் அவதானத்தைப் பெற்ற கட்சியாகவும் தன்னை நிலைப்படுத்தி உள்ளது.
'எமது நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களான நல்லாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்ற அரசியல் பொறிமுறைக்குள் சிறுபான்மை அரசியலை நிலைப்படுத்தி, அது சார்ந்த சமூகங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் சிறுபான்மையினக் கட்சிகளின் அரசியல் பலத்தை இன்னும் ஆழமாக ஸ்திரப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
'தற்போது முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மு.கா சரியான பாதையில் செல்கின்றது. எனவே, எதிர்வரும் தேர்தல்களில் இந்தக் கட்சிக்கு நாம் ஆதரவு வழங்கி, அதைப் பலம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணை வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025