2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’புறக்கணிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களையும் கவனத்திற்கொள்ளவும்’

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ள நிலையில், அம்பாறையில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் பேசும் தொண்டர் ஆசிரியர்கள் 109 பேர் தொடர்பில்  கவனத்திற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கையை அச்சங்கம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடகாலமாக பணியாற்றிவரும் 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு கடந்த ஜனவரியில் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியபோதும், சில நிர்வாக இழுபறிகள் காரணமாக நியமனங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

'இந்நிலையில், தொண்டர் ஆசிரியர் சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

'2009ஆம் ஆண்டிலும்; தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு, ஒரு தொகையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அப்போது, அம்பாறையில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியோரில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட அதேவேளை, தமிழ் பேசும் தொண்டர் ஆசிரியர்கள் 109 பேர் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

'அப்போது இந்த 109 பேரும் நியமனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.
'இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, இவர்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளார்கள். ஆகையால், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .