Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குப் புதிததாகப் பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையால், பொதுமக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் எனக் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று(27) அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளராக கடந்த 6 வருடங்களாகக் கடமையாற்றிவந்த ஐ.எம்.ஹனீபா, இம்மாதம் 7ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.இவர் சாய்ந்தமருதுப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குப் பதில் பிரதேச செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிவந்த ஐ.எம்.ஹனீபா, சிறந்த ஆளுமையுடன் செயற்பட்டு இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களினதும் நன்மதிப்பைப் பெற்ற சிறந்த அதிகாரி ஆவார்.
இவரது திடீர் இடமாற்றத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவின மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறானதொரு சிறந்த பிரதேச செயலாளர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடமாறிச் சென்றதனால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணி புரிகின்ற அதிகாரிகளின் மனம் புண்படாத வகையில் நாம் செயற்பட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மனப்பாங்கு எம்;மத்தியில் இருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025