Niroshini / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
“தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட முடியாமல் நாம் பயந்து ஒடுங்கியிருந்த காலம் போய், புத்தாண்டை சிறப்பாக கொண்டாடக் கூடிய நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்” என, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று(28) அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், எமது நாட்டிலே இன,மத,மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமைப்பட்டு இந்த நாட்டுக்கு உகந்த தேவையான நற்பிரஜைகளாக வாழ அனைவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறான சூழலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மேதினக் கூட்டம் அக்கரைப்பற்றிலே நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இக்கூட்டத்திலே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளும் நிலையில் அவர்களது உரை மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல செய்திகளை எதிர்பார்க்கின்றோம். இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தமது பலத்தினை மீளவும் உறுதி செய்ய வேண்டியது காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
57 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
25 Jan 2026
25 Jan 2026