2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இம்முறை அம்பாறையில் 40 ஆயிரம் ஏக்கரில் சிறுபோகச் செய்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது என  மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.ஏ.கலீஸ், இன்று (2) தெரிவித்தார்.

கடந்த வருடம் அம்பாறையில் 95 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிலவும் வரட்சி காரணமாக 40 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

சில பிரதேசங்களில் நெற்செய்கையுடன் உப உணவுப் பயிர்ச் செய்கையும் சில பிரதேசங்களில் உப உணவுப் பயிர்ச் செய்கை  மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்காக விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டம் வலய ரீதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X