2025 மே 01, வியாழக்கிழமை

'ஒலுவில் துறைமுகத்தை மூட அனுமதிப்பதில்லை'

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என சுகாதாரப் பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பைஷால் காசீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில்; இன்று நடைபெற்றபோது, அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதி அமைச்சர் பைஷால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கூட்டம்; நடைபெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயனடைந்து வரும் நிலையில், இத்துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் கூறிய விடயம் பொறுப்பற்ற செயற்பாடாகும்.  

இத்துறைமுக நுழைவாயிலில் காணப்படும் மணல் மேட்டை அகற்றுவதற்கு ஹோகாட் நிறுவனம் ஆய்வை முன்னெடுத்துள்ளது. இதற்கு சுமார் 350 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது' என்றார்.

மேலும் அக்கூட்டத்தில், நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் அட்டாளைச்சேனையில் நவீன சந்தை  அமைத்தல்.
தற்போதுள்ள மீன்சந்தை மற்றும் ஆடு, மாடு அறுக்கும் மடுவத்தை வேறிடங்களுக்கு மாற்றுதல்.
அட்டாளைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றியுள்ள 350 பேருக்கும் காணிக் கச்சேரி நடத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல்.

அஸ்ரப் நகர் திண்மக்கழிவு வளாகத்திலுள்ள கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் ஆலோசனையை பெற்றுக்கொள்ளல்.

சேனநாயக்க சமுத்திரத்தினால் பாதிக்கப்பட்டு சதுப்பு நிலமாக மாறியுள்ள அட்டாளைச்சேனை வயல் காணிகளை மீண்டும் விவசாயம் செய்யும் காணிகளாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .