Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக காணி இழந்த குடும்பங்களில் நட்டஈடு வழங்கப்படாத குடும்பங்களுக்கு நட்டஈட்டை வழங்குமாறு ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்கான காணி இழந்தோர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அன்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (3) அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில்; தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'2008ஆம் ஆண்டில் ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக 48 குடும்பங்களின் காணிகள் 49.5 ஏக்கர் நிலம் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டது. இவர்களில் 33 குடும்பங்களின் காணிகளுக்கு 2009ஆம் ஆண்டில் அரசாங்க விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் விலை மதிப்பீடு செய்யப்பட்டது.
விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணிகளுக்கான நட்டஈட்டுத் தொகை அதிகூடியது என்று தெரிவிக்கப்பட்டு,; குறிப்பிட்ட நட்டஈட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபையால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டில் மீண்டும் ஆவணங்கள் பரீட்சிக்கப்பட்டு 19 குடும்பங்களுக்கு மட்டும் ஒரு பேர்ச் காணிக்கு 30 ஆயிரம் ரூபாய் படி நட்டஈடு வழங்கப்பட்டன.
எஞ்சியுள்ள 29 குடும்பங்களுக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை. இதில் விலை மதிப்பீடு செய்யப்பட்ட 14 குடும்பங்களின் ஆவணங்களில் காணப்பட்ட சிறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, 2014ஆம் ஆண்டு அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 15 குடும்பங்களின் காணிகள் இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை.
மேலும், ஏனைய குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்காமலும், ஒரு பேர்ச் காணிக்கு 30 ஆயிரம் ரூபாயாகக் குறைத்துள்ளமையும் காணி உரிமையாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago