Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 18 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
டெங்கின் அபாயம் பற்றி தேசிய ரீதியில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் மக்கள் அவை பற்றி அலட்சியமாக இருந்து வருவது கவலையளிப்பதுடன் அது பெரும் ஆபத்தான நிலைமையையும் தோற்றுவிக்குமென அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தெரிவித்தார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளார் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீனின் வழிகாட்டலின் கீழ் இன்று(18) அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடடிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், "டெங்கு நுளம்பின் பெருக்கம் இன்று நாட்டுக்கு தேசிய பிரச்சினையாக மாறிவருகின்றது. இதனால் 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டு இரட்டிப்பான தொகையாக 54,945 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் மாத்திரம் 1311 டெங்குக் காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது வருட இறுதியில் பலமடங்கு அதிகரிக்கக் கூடிய நிலையை தோற்றுவிக்கலாம்.
டெங்கின் அபாயம் பற்றி நாளுக்கு நாள் பல வழிகளிலும் விழிப்புணர்வுகள், ஊடகங்கள் வாயிலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அவை பற்றி மக்கள் கவனத்தில் கொள்வதில்லை அல்லது. கண்டு கொள்வதில்லை என்றே கருதவேண்டியுள்ளது.
அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக டெங்கின் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றது.
பாவிக்கப்படாத கிணறுகளை முறையாக மூடிப்பாதுகாக்க வேண்டும். வடிகான் அமைப்புக்கள், பாவிக்கப்படாத டயர், சுரட்டைகள், பொலித்தீன்களினாலும் அதிகளிவில் நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகின்றது.
இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதெனவும் இதன் போது தெரிவித்தார்.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.சசிதரன் தலைமையிலான பொது சுகாதாரகள், பொலிஸார் மற்றும் இரானுவத்தினர், அக்கரைப்பற்று பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வீடுவீடாக குழுவாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago