2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'நெருக்கமான உறவை வளர்த்த மூத்த அரசியல்வாதி மசூர்மௌலானா'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்                   
 

மருதமுனைக்கு பக்கத்திலே இருக்கின்ற தமிழ் கிராமங்களுக்கும் இடையில் நெருக்கமான உறவை வளர்த்த ஒரு மூத்த அரசியல்வாதி  மூத்த அரசியல் வாதி செனட்டர் மசூர்மௌலானா, நம்மைவிட்டுப் பிரிந்திருக்கின்ற நாள்.இந்த நாளிலே நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்துக கொண்டிருக்கின்றோம் என தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை சைல்ட் பெஸ்ட் முன்பாடசாலையின் 11ஆவது பாடசாலை தின விழா சனிக்கிழமை(05) இரவுபாடசாலையின் தலைவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிள்ளைகள் எப்படிப்பட்டவர்கள் என்றால் பிள்ளைகளுடைய இன்பம்  எப்படிப்பட்டதென்றால் நமது  பிள்ளைகள்  தங்களுடைய  விரல்கலால் நமது  உடம்பிலே வருடுவதை அனுபவித்தப் பாருங்கள் அது எவ்வளவு அற்புதமாக இருக்குமென்று.

அதேபோன்று  அந்தப்பிளைகளின் சொற்களைக் கேட்கின்ற போது அந்தச் சொற்கள் நமது செவிக்கு இன்பம் தரும் என்பதை அனுபவித்தப் பார்க்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .