Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட நாவற்காடுப் பிரதேசத்தில்; தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பிரதேச மக்கள் இன்று (6) எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் செறிந்து வாழும் நாவற்காடுப் பிரதேசத்தில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று ஈடுபட்டிருந்தது.
அவ்வேளையில் அங்கு ஒன்றுகூடிய அப்பிரதேச மக்கள், இத்தொலைத்தொடர்புக் கோபுரம் அமைப்பதன் காரணமாக சுற்றாடலுக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறினர். எனவே, கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியையும் உடனடியாக மூடுமாறும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களைப் பாதிக்கும் எந்தவித நடவடிக்கைக்கும் இடங்கொடாமல், இத்திட்டத்தை நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அம்மக்கள்; கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு கோபுரம் அமைக்கவுள்ளதாக அறிந்த தாம், அரசாங்க அதிகாரிகளுக்கும் பிரதேச சபைக்கும் கடிதம் அனுப்பிய போதும், இதற்கு யார் அனுமதி கொடுத்தது எனவும் அம்மக்கள் கேள்வியெழுப்பினர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சபைச் செயலாளர் வி.கமலநாதன், 'பல திணைக்களங்களுக்கு ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமையவே நானும்; இதற்கான அனுமதி வழங்கினேன். இருப்பினும், மக்களின் கோரிக்கைக்கு அமைய இங்கு தொலைத்தொடர்புக் கோபுரம் அமைப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago