2025 மே 01, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சம்மாந்துறையில் வசித்துவந்த ஆதம்பாவா முகம்மது தன்ஸிர் (வயது 27) என்ற இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் புடைவைக் கடையொன்றில் புதன்கிழமை (17) இரவு அலுமினியம் பொருத்தும் வேலை செய்துகொண்டிருந்தபோது, மின் தாக்குதலுக்குள்ளானார். இவரின் கையிலிருந்த அலுமினியக் கம்பி அக்கடையின் அருகில் காணப்படும் மின்சாரக் கம்பியில் பட்டதால்,  இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .