Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நாட்டின் தேசிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அழைப்பின் பேரில் அம்பாறைக்கு இன்று11) விஜயம் செய்த அமைச்சர், வாங்காமம் பிரதேசத்தில் உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டவர்களை இறக்காமம் பிரதேச வைத்தியாலைக்குச்; சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் பௌதீகவளப் பற்றாக்குறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் தாதியர் கல்லூரிகளுக்கு நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் புதிதாக கொண்டு வரவில்லை. நாட்டினதும் மக்களினதும் நலனைக் கருத்தில் கொண்டே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது' என்றார்.
'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரம் நூற்றுக்கணக்கான தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டு வருகின்றது' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
27 minute ago