2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இந்திய பெண்ணிற்கு 10 நாட்கள் விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

சட்டவிரோதமான முறையில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பெண்ணை 10 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிபதி எம்.ஏ.றிஸ்வி இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்

இந்திய, தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இந்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டவிரோதமான முறையில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து குறித்த பெண் இன்று திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே இவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  Comments - 0

  • meenavan Monday, 07 January 2013 10:11 AM

    பாவம் பெண், தை பிறப்பு விளக்கமறியலில் தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X