Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை பொலிஸார் நடத்தினர்.
ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் பொலிஸார் மீட்டனர்.
இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அசுத்தமான இடத்தில் கரப்பான்பூச்சிகளுக்கு மத்தியில், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த காட்சிகளைக் கண்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் விபரித்துள்ளனர்.
இந்த விடுதிகளை நடத்திவந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கெந்தகுமார் செளத்ரி (36), ரஷ்மி அஜித் சமானி (42), அமித் செளத்ரி (32), அமித் பாபுபாய் செளத்ரி (33), மற்றும் மகேஷ்குமார் செளத்ரி (38) ஆகிய 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது ஆட்கடத்தல், பெண்களை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ரொக்கமாக வைத்திருந்த 5.65 லட்சம் அமெரிக்க டாலர்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், விடுதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் அமெரிக்க பொலிஸார் முடக்கிவைத்துள்ளனர்.
5 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
2 hours ago