Yuganthini / 2017 ஜூன் 07 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட வெளிவாரி பட்டப்படிப்புக் கற்கைநெறிக்கான பரீட்சைகள், எதிர்வரும் 10, 11ஆம் திகதிகளில் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று (07) அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த மே மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் வருட மாணவர்களுக்கான வெளிவாரிப் பட்டப்படிப்பு கற்கைநெறிக்கான பரீட்சைகளே, இவ்வாறு ஒலுவில் வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதில் கலைத்துறை, வியாபார நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ வர்த்தகமாணிப் பரீட்சைகளே எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் நடைபெறுமெனவும் அவர் கூறினார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026