2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 06 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
 
திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்து திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
இச் சம்பவம்பற்றி தெரியவருவதாவது,  
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் கடந்த மாதம் 26ஆம் திகதி விநாயகபுரம் நான்காம் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று சாய்ந்தமருது பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து கடந்த 9 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் சிறுமியுடன் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை இரவு 10.25 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வந்திருந்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் குறித்த நபரையும் சிறுமியையும் கைது செய்தனர்.
 
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் திருக்கோவில் பொலிஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0

  • jesmin Monday, 07 October 2013 04:19 AM

    இவனுக்கு பகிரங்க தண்டனை வழங்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .