2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் அதேவேளை,  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி இவ்வருடம் பெப்ரவரி மாதம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • no Saturday, 20 November 2010 06:02 AM

    நல்ல செயல் ஒன்றை செய்த அரசாங்கத்திற்கு நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .