2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் தொழில் முயற்சிக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

சர்வதேச வறுமை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு தொழில் முயற்சிக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் 60 சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், சமுர்த்தி தொழில்முயற்சி உதவியினூடாக முன்னேற்றமடைந்த 31 குடும்பங்களின் சமுர்த்தி கொடுப்பனவு அட்டைகளுக்கும் பயநுகரிகளினால் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.


கல்முனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயநுகரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .