Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 23 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள வடிகாண்கள் முறையாக நிர்மாணிக்கப்படாமையால் அவற்றில் தேங்கி நிற்கும் நீரினால் நுளம்புப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு விதமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாகவும், எனவே குறித்த வடிகாண்களை முறையாகப் பராமரிக்குமாறும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினருக்குத் தாம் பலமுறை அறிவித்துள்ள போதும், அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என - அட்டாளைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ. ஜவ்பர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வடிகாண்கள் பலவற்றில் நீர் தேங்கி நிற்பதையும், அதனால் ஏற்படக் கூடிய சுகாதார அச்சுறுத்தல் குறித்தும் பொதுமக்கள் தெரிவித்து வரும் முறைப்பாடு குறித்து மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜவ்பரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட பதிலைக் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
"அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வடிகாண்கள் முறையாகத் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்படவில்லை. அதனால், பல இடங்களில் வடிகாண்களினூடாக நீர் வடிந்தோட முடியாமல் தடைப்பட்டுத் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த நீர் அசுத்தமடைவதோடு, அதிலிருந்து டெங்கு போன்ற அபாயகரமான நோய்களை ஏற்படுத்தக் கூடிய நுளம்புகள் உருவாவதற்கும் சந்தர்ப்பமுள்ளது.
எனவே, இந்த வடிகாண்களை உடனடியாகத் துப்புரவு செய்து, நீர் வடிந்தோடக் கூடியவகையில் நிர்மாணிக்க வேண்டும். அல்லது வடிகாண்கள் அனைத்தையும் முழுமையாக மண்ணிட்டு நிரப்பி விட்டு, பின்னர் வடிகான் நிர்மாண வேலைகள் முழுமையடைந்தவுடன் வடிகான்களினுள் நிரப்பப்பட்ட மண்ணை அகற்றி விட முடியும்.
எவ்வாறிருப்பினும், வடிகாண்களை முறையாகப் பேணும்படி நாம் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினருக்கு எழுத்து மூலம் பலமுறை அறிவித்திருந்தும் கூட, இதுவரை அவர்கள் உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை" என்றார்.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago