2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

நன்னீர் மீன்பிடிப்பில் மீனவர்கள் அதிக ஆர்வம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் ஆறு மற்றும் குளங்களில் நன்னீர் மீன் பிடிப்பதில் அதிகம் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதன் காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் மீன்பிடி  படகுகளை கடலில் இருந்து கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இதனால் கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதேவேளை,  ஆற்றிலும் குளங்களிலும் நீர் பெருக்கெடுத்து செல்வதனால் மீனவர்கள் வலை வீசி மீன் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இறால், விரால் மற்றும் திலாப்பியா ஆகிய மீன் இனங்களை மலிவான விலையில் பெறக்கூடியதாகவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X