A.P.Mathan / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
சம்மாந்துறை 'மகளிர் வித்தியாலயத்தில்' தமது ஆண் பிள்ளைகளை இவ்வருடம் முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு பாடசாலை நிருவாகம் மறுப்புத் தெரிவித்தமையை தாம் கண்டிப்பதாகவும், அதேவேளை, தமது ஆண் பிள்ளைகளை குறித்த பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்கான அனுமதியை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டுமென்று தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அப்பகுதி பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, தமது ஆண் பிள்ளைகளை சம்மாந்துறை 'மகளிர் வித்தியாலயத்தில்' சேர்ப்பதற்கு மறுத்த பாடசாலை நிருவாகத்தினர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவதுளூ
சம்மாந்துறை மகளிர் வித்தியாலயமானது, அதன் பெயரில் 'மகளிர்' எனும் பதத்தினைக் கொண்டுள்ள போதும், இது ஆண் - பெண் மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு கலவன் பாடசாலையாகும்.
1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையினை, பெண்கள் பாடசாலையாக்கும் நோக்குடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் பாடசாலையின் பெயரை 'மகளிர் வித்தியாலயம்' என மாற்றியிருந்தனர். ஆனாலும், தனிப் பெண்கள் பாடசாலையாக்கும் அந்த முயற்சி கைகூடவில்லை.
இந்த நிலையில், இவ்வருடத்திலிருந்து இந்தப் பாடசாலையை மகளிர் பாடசாலையாக்கும் நோக்குடன் - ஆண் பிள்ளைகளை அனுமதிப்பதில்லை என, பாடசாலை நிருவாகம் முடிவொன்றினை எடுத்துள்ளதோடு, ஆண் பிள்ளைகளுக்கு இவ்வருடம் அனுமதியினையும் மறுத்திருந்தது.
இதனைக் கண்டித்தே குறிப்பிட்ட ஆண் பிள்ளைகளின் பெற்றோர் பாடசாலைக்கு எதிரே ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, உரிய அதிகாரிகளிடம் கோரி;க்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து பாடசாலையின் அதிபர் ரி.எம்.தௌபீக்கிடம் வினவியபோதுளூ 'இந்தப் பாடசாலையினை பெண் பாடசாலையாக மாற்ற வேண்டும் என்றும், அதனால் இம்முறை முதலாம் தரத்தில் சேர வரும் ஆண் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாமெனவும் இப்பகுதி பள்ளிவாசல்கள் முடிவெடுத்திருந்தன. அந்த முடிவின்படி இயங்குமாறு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எனக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கிணங்கவே, நான் ஆண் பிள்ளைகளுக்கான அனுமதியினை வழங்கவில்லை' என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
24 minute ago
35 minute ago
39 minute ago
51 minute ago
சிப்னா Wednesday, 26 January 2011 02:52 AM
ஆம் இந்த பாடசாலையில் ஆண்பிள்ளைகளை அணுமதிப்பது கூடாது. ஏன் என்றால் சில விடங்களில் அது நல்லம். இந்த பாடசாலையில் ஆண் பிள்ளைகளை அனுமதிப்பதை மிக கண்டிக்கிறன்
இப்படிக்கு :-சீதனத்தை எதிர்க்கும் மகளீர் சங்கம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
39 minute ago
51 minute ago