Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 மார்ச் 20 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் வீட்டின் மீது தேர்தல் வெற்றி ஊர்வலத்தில் ஈடுபட்ட எதிரணியினர் சிலரால் நேற்று சனிக்கிழமை தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றி ஊர்வலங்களை குறித்த சில நாட்களுக்கு நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்துள்ள நிலையில், இந்த ஊர்வலத்தினை நடத்தியயோர் மேற்படி தாக்குதலினையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஊர்வலத்தில் குறித்த பிரதேச அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
08 Jun 2025